மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரம்..பள்ளியுடன் பேச்சவார்த்தை நடத்திய தாய் - புதிய ஆதாரம் வெளியீடு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் கடந்த 13 ஆம் தேதி பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படம் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய காட்சியால் மீண்டும் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜுலை 12 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
மாணவி விடுதியில் இருந்து அவர் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவில் மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழலில் மாணவி ஸ்ரீமதியின் தாயார் பள்ளி நிர்வாகத்துடன் கடந்த ஜுலை 13 தேதி இரவு 7 மணிக்கு அமர்ந்து பேசுகின்ற காட்சி வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஸ்ரீமதியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பணம் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டி வந்த நிலையில், புதிய ஆதாரம் வெளியாகி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.