மாணவர்களின் பேச்சை கேட்டு கலகலவென சிரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் மாணவிகள் சொன்னதை கேட்டு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கலகலவென சிரித்தனர்.
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மேற்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசு மாதிரி பள்ளியை சென்று பார்வையிட்டார்.
அப்போது டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவிகள் இருவர் தாங்கள் விற்பனை செய்யும் பாரம்பரிய ஓவிய வேலைப்பாடுமிக்க ஃப்ரேம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கினார்.
அதுகுறித்து அந்த மாணவிகள் கூறுகையில், ரூபாய் நான்காயிரத்தை முதலீடு செய்து இதைத் தொடங்கி ரூ. 1 லட்சத்து ஐம்பதாயிரம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும்,
தாங்கள் 25 பேரிடம் ஓவியங்களை பெற்றதாகவும், அவர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
மாணவிகள் கூறியதைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவருமே கலகலவெனச் சிரித்தனர்.