கடவுளே அஜித்தே..முதலமைச்சர் முன்பே மாணவர்கள் செய்த சம்பவம் - பரபரப்பான அரங்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு மாணவர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுளே அஜித்தே..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக திகழ்பவர் அஜித். இவருக்கு கோடானக் கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவரது படங்கள் ஏதும் திரைக்கு வந்து சில காலங்களான நிலையில் இந்த இரு படங்களுக்காக
அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எனலாம். இதனிடையே கார் ரேஸிங்கிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் அண்மை காலமாக சமூக வலைதளங்களில் கடவுளே அஜித்தே என்ற கோஷம் பலர் எழுப்பி வருவதை பார்க்கமுடிகிறது.
எந்த சமூகா ஊடகம் எடுத்தாலும் அதில் அந்த கோஷம் படு வைரலாக பரவி வருகிறது. எந்தளவுக்கு என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் கோஷங்களை எழுப்பி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு கட்டத்தில் பொது வெளியிலும் நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள்
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடக்கமாக கோவையில் கள ஆய்வு செய்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் ரூபாய் 300 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அதில் தொண்டர்களும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையேற முயற்சித்தபோது, அங்கு கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள் சிலர் கடவுளே அஜித்தே.. அஜித்தே கடவுளே.. என்று கோஷமிட தொடங்கினர்.
தொடர்ந்து சில நிமிடங்களுக்கு அந்த கோஷத்தை விடாமல் எழுப்பினர். இதனால், அவ்விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் இந்த செயலுக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.