மாணவி கர்ப்பம்..தலைமறைவான இளைஞர் - வளைத்து பிடித்த காவல்துறை!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான பக்கத்துவீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரில் வசித்து வந்த இளைஞர் ஜோதி. இவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளிகள் இயங்காத நிலையில் அந்த சிறுமி ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக காதல் இருந்துவந்துள்ளது. பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஜோதி, மாணவியிடம் சில்மிஷம் செய்து ஆசைவார்த்தை கூறி அவரை மயக்கி இருக்கிறார். வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பின்னர் மீண்டும் வழக்கம்போல் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பேசிக்கொண்டிருந்து வந்துள்ளனர்.

அண்மையில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பெற்றோர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டனர்.

போலீசார் மாணவியிடம் துருவித் துருவி விசாரித்ததில் பக்கத்து வீட்டு ஜோடிதான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜோதி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஜோதி தலைமறைவாகிவிட்டார். அனைத்து மகளிர் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் ஜோதி இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்