அது எப்படி? 200க்கு 212 மதிப்பெண்கள் எடுத்த மாணவி - ஷாக் ஆன நெட்டிசன்கள்!
தொடக்கப் பள்ளியில் மாணவி ஒருவர் 200க்கு 212 மதிப்பெண்கள் எடுத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
மதிப்பெண்கள்
குஜராத் மாவட்டம் காரசானா கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.சமீபத்தில் பள்ளியில் இந்த ஆண்டு இறுதித் தீர்வு நடைபெற்றது. இதில் நான்காம் வகுப்பு படிக்கும் வன்ஷிபென் மனிஷ்பாய் மனைவி ஒருவர் கணிதத்தில் 200/212, குஜராத்தி மொழி பாடத்தில் 200/211 என்று மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றுள்ளார்.
இந்த மார்க் சீட் தற்போது இணையத்தில் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது மகளின் மதிப்பெண்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அதற்கு, கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி விளக்கம் அளித்துள்ளது.
அது எப்படி?
இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் மதிப்பெண் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஜராத்தி மொழிபாடத்தில் 200 க்கு 191 மதிப்பெண்களும், கணக்கு பாடத்தில் 200 க்கு 190 மதிப்பெண்களும் எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வைரலான மார்க் சீட் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் உலாவும் நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்களை விடவும் அதிகம் வழங்கப்பட்டது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் இத்தகைய பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்தும் கவலையை எழுப்பியுள்ளது.இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ‘இது குஜராத் மாடல் பட்டியல்’ என கலாய்த்து வருகின்றனர்.