மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்..!

CM MKStalin மு.க.ஸ்டாலின் Studentscholarship MKStalinRequest
By Thahir Mar 21, 2022 03:50 PM GMT
Report

பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண உதவி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர்.

உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.கட்சி வேறுபாடின்றி உயர்கல்வி உறுதி திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றார்.

மேலும் திருமண உதவி திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார்.

திருமணம் என்ற தகுதிக்கு முன்னாள் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நிதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம், மேலும் அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்தவர்களில் 24.5% பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டது.

கல்வி என்ற நிறைந்த சொத்தை பெண்களுக்கு வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.