மாணவியின் இறுதி சடங்கு திடீர் மாற்றம் - உடலை புதைக்க ஏற்பாடுகள் தீவிரம்..!
மாணவியின் உடலை தகனம் செய்ய இருந்த நிலையில் தற்போது உறவினர்கள் புதைக்க முடிவு செய்துள்ளனர்.
மாணவி மரண வழக்கு
மாணவி ஸ்ரீமதி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்யும் என கூறப்பட்டது.
இதையடுத்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
இறுதி சடங்கு திடீர் மாற்றம்
மாணவியின் உடல் கடலுார் மாவட்டம் பெரியநெசலுார் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
தற்போது உடலை புதைப்பதற்கு முடிவு செய்யபட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பிரேத பரிசோதனை முடிவில் ஏதேனும் குழப்பம் இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.