திருமணம் செய்வதாக கூறி SSLC படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய நபர் - போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருமணம் செய்வதாக கூறி SSLC படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மாணவியை கர்ப்பமாக்கிய நபர் கைது
கோவில்பட்டியை சேர்ந்தவர் சக்திகுமார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த SSLC படிக்கும் மாணவி அர்ச்சனாவிற்கும் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, அர்ச்சனாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சக்திகுமார் அர்ச்சனாவிடம் தனிமையில் இருந்துள்ளார். இதனால், அர்ச்சனா கர்ப்பமானார். இதன் பிறகு, அர்ச்சனா கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அர்ச்சனாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாதம் கர்ப்பமாக்கியதற்காக சக்திகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.