முன்னாள் காதலனை உயிரோடு கொல்ல திட்டம் போட்ட +2 மாணவி!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் விக்னேஷ். இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அந்த மாணவி திடீரென விக்னேஷை விட்டு பிரித்துள்ளார். வேறு ஒரு மாணவனை அந்த மாணவி காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவி விக்னேஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி, வீட்டில் உன்னை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, காதலன் விக்னேஷ் மிரட்டியதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதனையடுத்து, கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார் மாணவி. கூலிப்படையினர் சொன்னபடி, விக்னேஷை பெத்தானியா மலைப்பகுதிக்கு வரவழைத்துள்ளார் அந்த மாணவி. அங்கு வந்த விக்னேஷை கூலிப்படையினர் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அங்கிருந்து தப்பிச் சென்ற விக்னேஷ் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மாணவி கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறினார். இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அங்கு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது உடனடியாக கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.