முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மாணவி நந்தினி

Anbil Mahesh Poyyamozhi Dindigul Education
By Thahir May 09, 2023 06:24 AM GMT
Report

12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வில் 93.77 சதவீத தேர்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 21 ஆவது இடத்தை பெற்றது.

Student Nandini personally met M.K.Stalin

இம் மாவட்டத்திலுள்ள 12 அரசுப் பள்ளிகள் உள்பட 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 6 பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் நகால் நகரிலுள்ள அண்ணாமலையார் மில்ஸ் அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியியல், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய படங்களில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

முதலமைச்சரை சந்தித்த நந்தினி 

இந்த நிலையில் அவருக்கு பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி நந்தினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போ மாணவியிடம் பேசிய அவர் மிகப் பெரிய பெருமையை தேடி கொடுத்துட்டீங்க வாழ்த்துக்கள் உங்களை பார்த்து மற்ற பிள்ளைகள் நல்லா படிக்கணும் என்று ஆசை படட்டும் ரொம்ப சந்தோஷம்.

Student Nandini personally met M.K.Stalin

உங்களுக்கும் உங்களுக்கு வகுப்பு எடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள என அவர் தெரிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நந்தினி.