பரபரத்த தலைநகரம்; பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் - காரணத்தை பார்த்தீங்களா?
மாணவர் ஒருவரே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி, துவாரகா பகுதியில் உள்ள பப்ளிக் பள்ளி, மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால், அந்த மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். உடனே, விரைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிய மாணவன்
மேலும், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்று வரும் 16 வயது மாணவர் ஒருவரே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், விளையாட்டுத்தனமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.