ஓடும் ரயிலில் விபரீதம்; தூக்கி எறியப்பட்ட மாணவர் - நெஞ்சை உலுக்கும் காட்சிகள்
Chennai
Instagram
Viral Photos
By Sumathi
ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
விபரீத செயல்
சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ். இவர் பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வருகிறார்.
கல்லூரி முடிந்த பின் தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயிலின் பட்டிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த பொழுது மின் கம்பத்தில் அடிபட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.