8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் வெறிச்செயல்

Crime Tirunelveli
By Sumathi Apr 15, 2025 07:52 AM GMT
Report

 8 வகுப்பு மாணவனை அரிவாளல் வெட்டிய சக மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.

அரிவாள் வெட்டு

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றன.

nellai

இந்நிலையில், இந்த பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் மாணவன் படுகாயம் அடைந்தார்.

தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணனுக்காக காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள் - ஒருவர் உயிரிழப்பு

அண்ணனுக்காக காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள் - ஒருவர் உயிரிழப்பு

மாணவன் படுகாயம்

இதற்கிடையில் சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் வெறிச்செயல் | Student Hacked With Sickle In Nellai

அதில் இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்,

பேனா, பென்சில் தொடர்பான தகராறில் 8-ம் வகுப்பு மாணவன்தான் கொண்டு வந்த அரிவாளால் சக மாணவனை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.