சகோதரனுடன் நெருக்கம்..பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - பகீர் சம்பவம்!

Tamil nadu Pregnancy Cuddalore
By Sumathi Sep 04, 2022 07:43 AM GMT
Report

மாணவி தனது பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவி

கடலூர், புவனகிரி அருகே அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் கழிவறை அருகே இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சகோதரனுடன் நெருக்கம்..பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - பகீர் சம்பவம்! | Student Gives Birth In School Washroom

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆண் சிசு

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவி ஒருவரே இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சகோதரன் உறவு முறை கொண்ட 10 ஆம் வகுப்பு சிறுவனுடன் அந்த பெண் நெருங்கி பழகியதில் கர்ப்பமாகி உள்ளார்.

சகோதரனுடன் நெருக்கம்..பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - பகீர் சம்பவம்! | Student Gives Birth In School Washroom

இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த மாணவி சம்பவத்தன்று குழந்தையை பெற்றெடுத்து கழிவறை அருகே வீசி விட்டு வந்ததும் தெரியவந்தது.

அதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட 10 ஆம் வகுப்பு சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.