மாணவர்கள் உணவில் கிடந்த ஆணுறை; பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கம்?அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!
பள்ளி மாணவர்கள் சாப்பிடும் உணவில் காண்டம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம பொருள்
சீனாவின் குவாங்சோ நகரில் உள்ள தொழிற்கல்வி பள்ளியில் சிற்றுண்டி வேளையில் மாணவர்கள் சாப்பிடும்போது உணவில் வித்தியாசமான பிளாஸ்டிக் பொருள் கிடப்பதை பார்த்துள்ளனர்.
அந்த பொருள் வட்ட வடிவமாகவும் டிரான்ஸ்பரண்டாகவும் இருந்ததால் அது ஒரு ஆணுறை என்று தெரியவந்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் இது குறித்து ஊடகத்திற்கு தெரிவித்ததும் இந்த விஷயம் பெரிதாக வெடித்துள்ளது.
சோதனை
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அங்குள்ள கேன்டீனில் சுகாதார பரிசோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ஏதும் சிக்காததை அடுத்து உணவில் கிடந்தது வாத்து கறி என்றும் அந்த விசித்திரமான பொருள் வாத்தின் கண்விழியில் உள்ள ஜவ்வு என்றும் தெரிவித்தனர்.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த சுகாதார நிர்வாகிகள் பள்ளியில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அது உண்மையாகவே வாத்து கறியா இல்லை மாணவர்கள் கூறியது போல ஆணுறையா என்று இனிமேல்தான் தெரியவரும்.