மாணவி வலுக்கட்டாயமாக சோதனை - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

student tested dismissal forcibly head Master
By Thahir Jan 08, 2022 01:32 PM GMT
Report

கர்நாடகா மாநிலம் பள்ளிக்கு மாணவி கைபேசி எடுத்து வந்ததாக கூறி அவருடைய ஆடைகளை களையச் சொல்லி அவமதித்த தலைமை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி கனங்கூர் கிராமம். இங்குள்ள பள்ளிக்கு மாணவி ஒருவர் கைபேசியை எடுத்து சென்றுள்ளார்.

இது தலைமையாசிரியர் சினேகலதா அவனுக்கு வந்துள்ளது. இதை ஒழுங்கீனமான நடவடிக்கையாக குறிப்பிட்டு மாணவியை தனியறைக்கு அழைத்துள்ளார்.

அப்போது பரி சோதனை செய்வதாக கூறி மாணவியை அணிந்திருந்த ஆடைகளை வலுக்கட்டாயப்படுத்தி ஒவ்வொன்றாகக் களைத்துள்ளார்.

மாணவிக்கு இந்த நடவடிக்கை அதிர்ச்சியை தர அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது தலைமையாசிரியர் சினேகலதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சினேகலதா கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் தெரிவித்தனர்.