நீட் எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன அவலம்: வெளியான அதிர்ச்சி சம்பவம்
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன அவலம் மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட்தேர்வு
நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பாக உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் மயிலாப்பூரில் நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையினை கழற்ற சொன்ன அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வரம்பு மீறிய அதிகாரிகள்
மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது