மாணவர்களுக்கு இடையே சண்டை - ஒரு மாணவன் உயிரிழப்பு
தென்னை மட்டையால் 2 மாணவர்கள் தாங்கிக்கொண்டு சண்டையிட்டதில், ஒருவர் வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், சக்கில்நத்தம் கப்பல்வாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். நேற்று மாலை 4 மணியளவில் சக்கில்நத்தம் கிராமத்தினை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் சமையல் செய்க வைக்கப்பட்டு இருந்த தென்னை மட்டையால் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கோபிநாத் என்ற மாணவனை மற்றொரு மாணவர் தாக்கியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கோபிநாத் சுருண்டு விழுந்து வலிப்பு நோயால் துடிதுடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் கோபிநாத்தை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இரண்டு மாணவர்களும் அடுத்தடுத்த வீடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.