கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை - கருப்பசாமி எச்சரிக்கை
அடுத்த சில தினங்களில் 10, 11, 12ம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. வரும் 5ம் தேதி முதல் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட்டுகள் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.
இது குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி கூறுகையில், கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது. அப்படி ஹால்டிக்கெட் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு உடனடியாக ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.