விளையாடியதால் ஆத்திரம் - 5-ம் வகுப்பு மாணவனின் காதை கிழித்த ஆசிரியை - கொடூரம்!
ஆசிரியர்
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 23-ம் பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவனின் தாயாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது "உங்கள் மகன் கீழே தவறி விழுந்து விட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர் மாணவனிடம் விசாரித்துள்ளனர்.
கொடூர செயல்
அப்போது, தான் கீழே விழவில்லை என்றும், விளையாடியதற்காக நாயகி என்ற ஆசிரியை காதை பிடித்து திருகினார் என்றும் மாணவன் கூறியுள்ளான்.
இதில் அந்த மாணவனின் காது கிழிந்து தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியரை குழந்தைகள் மீதான வன்முறை சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.