சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழப்பு
சென்னையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு, சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி, பேருந்து மோதி பலியாக சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரசுப் பேருந்து மீது மோதி மாணவி உயிரிழப்பு
குரோம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் இன்று காலை நடைபெற்ற சுதந்திர தின விழா நடந்துள்ளது.
இதில் பங்கேற்றிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மீது, பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், மாணவி சம்பவ இடத்தலகே உயிரிழந்தார்.
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. பொழிச்சலூர் - அஸ்தினாபுரம் இடையே இயக்கப்படும் 52H என்ற அந்த மாநகரப் பேருந்து, சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவி பள்ளி மாணவி லட்சுமி மீது மோதியது.
இதில் பள்ளி மாணவி லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மாநகர பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுதந்திர தினம் என்று பள்ளி மாணவி விபத்தில் பலியாகிய சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.