"மீண்டும் ஒரு ஹிஜாப் சர்ச்சை" - மாணவிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு தடைவிதித்தது.
ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை ஆப்சென்ட் போட்டு அனுப்பியது கல்லூரி நிர்வாகம்.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத வந்த மாணவிகளை, தேர்வு நடத்தும் அதிகாரிகள், தேர்வு எழுதவிடாமல் வெளியே நிற்க வைத்துள்ளார்கள்.
இதனால் மீண்டும் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகி வருகிறது.
நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிதார் நகரில், BRIMS கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது.
மாணவர்களில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களும் தேர்வு எழுதவந்திருந்தனர்.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்து வந்ததால், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை அங்கிருந்த தேர்வு நடத்தும் அதிகாரிகள் இதையடுத்து அந்தப் பெண்களின் உறவினர்கள் சிலர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போதும் ஹிஜாப் அணிந்திருந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது,அங்கிருந்த ஒருவர் இதை வீடியோ எடுக்க முயற்சி செய்தார்.
ஆனால், வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை, ஆசிரியருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.