Exam நடுவே குழந்தை பெற்ற மாணவி
மத்தியபிரதேசத்தில் தேர்வு எழுதிகொண்டிருந்த 17 வயது மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் Dhar நகரை சேர்ந்த 17 வயது மாணவி காயத்ரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
10ம் வகுப்பு கணித தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார், திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் ஆசிரியரின் அனுமதியுடன் கழிவறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி திரும்பி வராததால் கழிவறைக்கு சென்று பார்த்த போது குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது, அப்போது தான் குழந்தையை பெற்றெடுத்தது தெரியவந்தது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மாணவி மற்றும் குழந்தையை அருகிலுள்ள சுகாதார மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவி கர்ப்பமாக இருந்தது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்பது தெரியவந்தது
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதன் விளைவாக கர்ப்பமானதாகவும் மாணவியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.