ஸ்ரீமதியின் தாயாரை சென்று பார்க்க நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் : கொந்தளித்த அண்ணாமலை

DMK BJP K. Annamalai
By Irumporai Jul 17, 2022 09:17 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது.இந்த கலவரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலதுறையினர் சிலர் காயமடைந்தனர்.  

தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள்

மேலும் , போரட்டக்காரர்கள் சிலர் காவல் துறையின் வகனங்களை தாக்கினர், அதே சமயம் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

ஸ்ரீமதியின் தாயாரை சென்று பார்க்க நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் : கொந்தளித்த அண்ணாமலை | Student Death Transferred To Cbcit Annamalai

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த நிலையில் போரட்டம் களவறமாக மாறியது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கள்ளக்குறிச்சி வன்முறை - வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பதிவில் :

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்

ஆளும் திமுகஅரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், தமிழக பாஜக கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்