மாணவி உயிரிழப்பு விவகாரம் தனியார் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு..!
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர்,ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனியார் பள்ளி தாளாளர்,ஆசிரியர்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர்,ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
15 நாள் நீதிமன்ற காவல்
மேலும் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Kallakurichi Shakti school correspondent, principle, secretary and two teachers where arrested yesterday. Today 15 days remanded to judicial custody. @polimernews @tnpoliceoffl @klkpolice #KallakurichiStudentDeath pic.twitter.com/BVaKiAEPtW
— Saravanakumar (@Saravananjourno) July 19, 2022