ஆயிரங்கணக்கான தேனீக்களை தாடி போல் முகத்தில் வைத்த மாணவி!

Tamil nadu India
By Vinoja May 22, 2026 02:00 PM GMT
Report

கோவையில் சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களை தாடி போன்ற வடிவில் அமைத்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் தற்போது இணையத்தில் படு வைரலாகிவருகின்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி பாக்கியலட்சுமி.

ஆயிரங்கணக்கான தேனீக்களை தாடி போல் முகத்தில் வைத்த மாணவி! | Student Creates Awareness With Bees On Her Face

இவர் சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனது முகத்தில், தாடி போல வைத்து தேனீக்களை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சுமார் 20,000 தேனி பூச்சிகளை ஒரே நேரத்தில் பாக்கியலட்சுமி முகத்தில் தாடி போல வடிவமைத்து இருந்தார். பெண்களும் எளிமையாக தேனீக்களை கையாள முடியும் என்பதை பறைசாற்றும் வகையிலும், தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனீக்களை கொண்டு தாடி வைத்ததாக குறித்த மாணவி தெரித்துள்ளார்.