பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை - கடிதம் சிக்கியது
கோவில்பட்டி அருகே மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மாணவி தற்கொலை
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் திடீரென மாணவி தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடிதம் சிக்கியது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களுடன் பேச்சவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். உறவினர்கள் சிபிசிஐடி விசாரணை கேட்டுள்ளனர்.
மாணவி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.