நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தற்கொலை
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த ஜுலை 17ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.இதில் நாடு முழுவதும் 58.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் சென்னை அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா (19) நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நீட் தேர்வு தோல்வியால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.