கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்!
மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டிய ஆசிரியர்
தஞ்சாவூர், மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மணிமேகலை தம்பதி. இவர்களின் ஒரே மகன் ஸ்ரீராம். தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மணிமேகலை வீட்டிற்கு சென்று அறையை பார்த்துள்ளனர்.
இதில் ஸ்ரீராம் எழுதிய கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்துகொண்டு என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார்.
அதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
மாணவன் தற்கொலை
இதுகுறித்து மாணவனின் தாய் பேசுகையில், என் புள்ளை, ஒரு மாணவிக்கிட்ட ப்ரெண்ட்லியா பேசியிருக்கிறான். இது எங்களுக்கு தெரியாது. ஆசிரியர் எங்களை அழைத்து இதை சொல்லியிருக்கலாம். அதை செய்யாத ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தையில் ஸ்ரீராமை திட்டியிருக்கிறார்.
பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது. அப்படி பேசுற இடத்துலயும் அவன் இருக்க மாட்டான். ஆசிரியர் திட்டியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் நல்ல பையன் அவனை நல்ல விதமா வளர்த்திருக்கோம். ஸ்போர்ட்ஸில் ஆர்வமா இருந்து விளையாடி வந்தான்.
கடந்த வருடம் லீவ் போடாமல் ஸ்கூலுக்கு போனதற்கு பிரைஸ் வாங்கினான். அப்படிப்பட்டவனை ஆசிரியர் பேட் வேட்ஸில் திட்டியதால் இந்த முடிவை எடுத்துட்டான். அம்மாவைக்கூட அவன் நினைச்சு பாக்காம இப்படி செஞ்சுட்டான்.
அவன் இல்லாமல் நாங்கள் இனி எப்படி வாழப்போறோம்னு தெரியல" என கண்ணீர்விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.