தேர்வு எழுதுவதற்குத் தாமதமாக வந்த மாணவி..கேட்டின் கீழ் சிக்கிய அவலம் -கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
தேர்வு எழுதுவதற்குத் தாமதமாக வந்த மாணவி ஒருவர் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் செல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார்
பீகார் மாநிலம் நவாடா பஜாரில் உள்ள தேர்வு மையத்தில், இடைநிலைத் தேர்வுகள் நடந்துள்ளது. பொதுவாகத் தேர்வு விதிகளின்படி, தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் .இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில மாணவர்கள் தாமதமாக வந்தனர். இதனால் தேர்வு மையத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் சில மாணவர்கள் திருப்பி சென்றனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாணவி தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டார்.
மாணவி
மேலும் சில மாணவர்கள் தடுப்புச் சுவரைத் தாண்டியும், மூடிய வாயில்களின் கீழ் ஊர்ந்து செல்ல முயன்றன. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தற்போது இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து நவாடா காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 8 சிறுமிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கன்ஹாய் இன்டர் ஸ்கூலைச் சேர்ந்த அனிஷா குமாரி, தனிஷா குமாரி, ஸ்ருதி குமாரி, தீப்தி மற்றும் பூனம் குமாரி , கல்பனா குமாரி, சோட்டி குமாரி மற்றும் சானியா குமாரி என்பது தெரியவந்தது.