Zoology புத்தகத்தோடு இறுதி ஊர்வலம் செல்லும் மாணவி ஸ்ரீமதி உடல்..!
மாணவி ஸ்ரீமதியின் உடல் மீது உயிரியல்(Zoology)புத்தக்தோடு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று காலை மாணவியின் பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து உறவின் முறைபடி மாணவியின் தாய்மாமன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தாய் மற்றும் தந்தை கதறலுக்கு இடையே மாணவிக்கு இறுதி சடங்குகளை மாணவியின் உறவினர்கள் செய்தனர்.
தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன்,மாவட்ட ஆட்சியர்,ஊர் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவியின் உடல் அடக்கம் செய்வதை அடுத்து 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. உடலின் மீது 11 ஆம் வகுப்பு உயிரியல் (Zoology) புத்தகம் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
மாணவி ஸ்ரீமதிக்கு உயிரியல் (Zoology) பாடப்பிரிவு அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறப்படுகிறது.