பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது
பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்றில் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.
இந்த வீடியோவை உடன் இருந்த மாணவன் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவில் கட்டுயா...கட்டுயா என்று கூற மாணவன் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.
அப்போது உடன் இருந்த மாணவர்கள் பூக்களுக்கு பதில் காகிதங்களை கிழித்து வீசியுள்ளனர்.வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே..போலீசார் விசாரணை நடத்தினர்.
மாணவன் கைது
விசாரணையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு பேரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மாணவியிடம் குழுந்தைகள் நலத்துறை அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவனை போலீசார் கைது செய்தததாக கூறப்படுகிறது.