இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு

Indian Cricketer Stuart Binny
By Thahir Aug 30, 2021 06:13 AM GMT
Report

இந்திய அணிக்காக சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீர்ர ஸ்டுவர்ட் பின்னி.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணிக்காக 2014-16ம் ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

1983 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர் ராஜர் பின்னியின் மகனான ஸ்டூவர்ட் பின்னிக்கு வயது 37.

இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு | Stuart Binny Indian Cricketer

டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ஸ்டூவர்ட் பின்னி. ஒருநாள் போட்டிகளில் 230 ரன்களும் 20 விக்கெட்டுகளையும், டி20-யில் 24 ரன்கள் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னியின் மறக்க முடியாத ஒரு பந்து வீச்சு எது என்றால் 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் அனில் கும்ப்ளேயின் சிறந்த பவுலிங் சாதனையை முறியடித்தார்.

4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை 58 ரன்களுக்குச் சுருட்டினார். இதே போட்டியில் இந்தியாவும் 105 ரன்களுக்குச் சுருண்டது வேறு கதை. இந்தப் பந்து வீச்சு உலக சாதனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியம், மற்றும் கர்நாடகா கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், வெல் விஷர்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ஸ்டூவர்ட் பின்னி, "கிரிக்கெட் என் ரத்தத்தில் ஓடுகிறது. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டுக்கு நான் திருப்பி கொடுப்பேன். அடுத்த இன்னிங்ஸிற்காக உங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்"