எத்தனை போராட்டம் , எவ்வுளவு மன உளைச்சல் : தமிழகத்தில் கொரோனா பரவி இன்றோடு ஒரு வருடம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. ஒரு வருடத்தில் தமிழகத்தில் மோசமான பாதிப்ப்புகளையும், மறக்க முடியாத சோகத்தையும் கொரோனா கொடுத்துள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைவாக உள்ளது கடந்த 2019ம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வுஹன் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்க வில்லை இந்தியாவில் கடந்த 2020 ஜனவரியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. அதன்பின் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 2020ம் வருடம் மார்ச் 7ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு பதிவானது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வேகமாக தமிழகம் முழுக்க கொரோனா அதிகமானது.
கடந்த வருடம் ஜூலை 27ம் தேதி தமிழகத்தில் மிக அதிகமாக பரவியது ஒரே நாளில் 6,993 கேஸ்கள் பதிவானது. கடந்த வருடம் ஜூலை மாதம் 31ல் தமிழகத்தில் கொரோனா உச்சம் தொட்டது. கோயம்பேடு கிளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் தமிழகத்தில் கொரோனா பரவியது. கோயம்பேடு கிளஸ்டர்தான் தமிழகடத்தில் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பரவ காரணமாக இருந்தது.
84% சதவிகித கொரோனா மரணங்கள் தமிழகத்தில் பிற உடலுபாதைகள் இருந்ததால் ஏற்பட்டது. ஜூலை மாதத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கியது ஜூலை மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் குறைந்ததுள்ளது. அதோடு குணாமாகும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகம் முழுக்க 85 கொரோனா சோதனை மையங்கள் வைக்கப்பட்டுகொரோனா பெரிய அளவில் கட்டுக்குள் வந்தது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 854554 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3952 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். 8,38,085 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
12517 பேர் இதுவரை கொரோனா காரணமாக தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.
கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கவலையளிக்க கூடிய செய்திதான்.
இன்னமும் கொரோனாவை குணபடுத்த கூடிய மருந்து இன்னும் வரவில்லை ஆகவே முக கவசமும் தனிமனித இடைவெளியும் தான் நம்மை காக்கும் கவசம்.