விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசார் மாபெரும் போராட்டம் - டெல்லியில் பதற்றம்
விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசார் டெல்லியல் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பு உடை அணிந்து போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்குள் வந்தார்.
நாடாளுமன்றத்தில், ராகுல் காந்தி தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி காங்கிரசார் பேரணியாக சென்றனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி செல்ல முயற்சி செய்தபோது, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி போராட்டம் நாடாளுமன்ற உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருக்கிறது.
144 தடை போடப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க டெல்லி போலீசார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.