பிரதமர் மோடிக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம்

airport modi bangladesh hasina dhaka
By Jon Mar 26, 2021 01:51 PM GMT
Report

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பானது. வங்கதேசத்தின் 50வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மோடி வங்கதேசம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாட்டின் உறவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உட்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 40 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இரு வேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலே வன்முறைக்கு காரணம் என போராட்டக்காரர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.