வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் - இபிஎஸ்

M K Stalin DMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Nov 15, 2022 08:29 AM GMT
Report

வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வீராங்கனை உயிரிழப்பு 

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் ராணி மேரி கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கால் பந்து வீராங்கனையாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் , அண்மையில் மாணவியின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்துார் அரசு புறநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் - இபிஎஸ் | Strongly Condemn Dmk Govt Eps

மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன் பின்னர் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இபிஎஸ் கண்டனம் 

இவரின் மரணத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,

வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் - இபிஎஸ் | Strongly Condemn Dmk Govt Eps

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்,

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.