கருப்பு கொடி காட்டி ஆளுநருக்கு எதிர்ப்பு : கம்யூ. கட்சியினர் கைது
அரசு சார்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடிகாட்டியதால் பரபரப்பு நிலவியது.
ஆளுநர் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, விருதுநகர் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். இதற்காக நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜபாளையம் அரசு பங்களாவில் தங்கியிருந்தார்.

கருப்பு கொடி எதிர்ப்பு
இந்நிலையில், இன்று காலை ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அப்போது ஆளுநர் செல்லும் வழியில் திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர்கள் .
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவைக் கண்டித்து ஆளுநர் ஆர்,என் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் , இதனை தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.