அதிமுக கட்சி அலுவலகத்தில் மோதிக் கொண்ட ஜெயக்குமார்- செல்லூர் ராஜூ

By Fathima Dec 04, 2021 12:45 PM GMT
Report

அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயக்குமாரின் தந்தை குறித்து செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ ஒன்று வைரலானது.

இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் ஜெயக்குமார் புகாரளித்தார், இன்று அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வரும் நிலையில் இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர்.

அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது, உடனே மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.