வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் யாருக்கும் பயப்பட மாட்டோம் - போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு
நாளை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி தொடரும் என போக்கிவரத்து தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஊதிய உயர்வு கோரி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுதத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து சங்கங்கள் கூறி இருந்தன. நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பஸ் ஊழியர்கள் பங்கேற்று பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற கோரிக்கைகளை பல நாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்த காரணத்தால்நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஆனால் நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதில் கூறியுள்ளன.