இந்தியாவுக்காக விளையாடும் போது மன அழுத்தம் அதிகமாக உள்ளது - ரோகித் ஷர்மா

Thahir
in கிரிக்கெட்Report this article
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி மாற்றப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து ரோகித் சர்மா, இந்திய அணியின் முழுநேர ஷார்டர் பார்மெட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா முதல் முறையாக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “இந்திய அணிக்காக விளையாடும் போது பிரஷர் (அழுத்தம்) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
அந்த அழுத்தம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். மக்கள் எப்போதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டு இருப்பார்கள்.
ஒரு கிரிக்கெட் வீரனாக இதை சொல்கிறேன். இப்போது நான் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம். அதைவிடுத்து மக்கள் பேசுவது குறித்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏனெனில் அவர்கள் பேசுவதை நம்மால் நிறுத்த முடியாது. நான் இதைப் பற்றி பல முறை சொல்லி விட்டேன். நான் அதை சொல்லிக்கொண்டே தான் இருப்பேன், அது போல, நாங்கள் ஒரு உயர்தர போட்டியை விளையாடும்போது, அதிகமாக அழுத்தம் இருக்கும் என்பதை அணி கூட புரிந்துகொள்கிறது.
நம்மிடம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம், அதாவது, விளையாடுவதற்குச் சென்று வெற்றி பெறுவது, நீங்கள் விளையாடத் தெரிந்த வழியில் விளையாடுவது. வெளியில் நடக்கும் பேச்சுக்கள் முக்கியமற்றவை என்று நான் நினைக்கிறேன்.
எங்களைப் பொறுத்தவரை, நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம். x, y, z பற்றி நான் நினைப்பது முக்கியமானது, ஏனெனில் நீங்கள் வீரர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க விரும்புகிறீர்கள், அதுவே நாங்கள் விரும்பும் இலக்கை அடைய எங்களுக்கு உதவும்.
ராகுல் டிராவிட் வெளிப்படையாக அதைச் செய்ய எங்களுக்கு உதவப் போகிறார். எனவே நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
?️?️ "The pressure will always be there. As a cricketer, it is important to focus on my job."
— BCCI (@BCCI) December 12, 2021
SPECIAL - @ImRo45's first interview after being named #TeamIndia’s white-ball captain coming up on https://t.co/Z3MPyesSeZ. ?️
Stay tuned for this feature ⌛ pic.twitter.com/CPB0ITOBrv