எல்லா எம்எல்ஏ-க்களுக்கும் பலம் இருக்கிறது: பாரபட்சம் பார்ப்பவர் நல்ல பிரதமர் அல்ல - கமல் பேச்சு

modi kamal bjp mnm
By Jon Mar 25, 2021 11:57 AM GMT
Report

எல்லா எம்எல்ஏக்களுக்கும் பலம் இருக்கிறது. ஆனால், பாரபட்சம் பார்ப்பவர் நல்ல பிரதமர் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் தொடர்பில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்து விடலாம் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது - 'மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி கொடுத்து பாரபட்சம் பார்க்கும் பிரதமர் நல்ல பிரதமர் கிடையாது.

எல்லா எம்எல்ஏ-க்களுக்கும் பலம் இருக்கிறது: பாரபட்சம் பார்ப்பவர் நல்ல பிரதமர் அல்ல - கமல் பேச்சு | Strengths Discriminator Good Prime Minister Kamal

எல்லா எம்எல்ஏக்களுக்கும் பலம் இருக்கிறது. அதை நிராகரிக்காத பிரதமரே நல்ல பிரதமர். உதயநிதி தயாரிப்பில் வெளியான படத்திற்கு நான் வாங்கிய சம்பளத்துக்கு வரியும் கட்டி இருக்கிறேன்.

கமல்ஹாசன், கோவை தெற்குத் தொகுதிகாக இதற்கு முன் என்ன செய்திருக்கிறார்? இல்லை அரசியலில்தான் என்ன செய்திருக்கிறார் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னர் விமர்சித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளதால் கோவை தெற்கு தொகுதி, தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது என்று பேசினார்.