பட்டப்பகலில் அத்துமீறல்: பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்

Coimbatore
By Fathima Sep 05, 2026 04:45 AM GMT
Report

கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமைந்துள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த விவகாரத்தில் போலிசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.

இதன்போது அதிர்ச்சிகர சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்தது, அதாவது அசோகபுரம் ரயில்வே மேம்பால சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் தூங்கி கொண்டிருந்தார்.

பட்டப்பகலில் அத்துமீறல்: பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள் | Street Dogs Saved A Woman

அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தெருநாய்கள் துரத்தி வந்துள்ளன, சத்தம் கேட்டு விழித்த பெண் கல்லால் அடித்தால் நாய்கள் போய்விடும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து குறித்த நபர் நாய்களை அடித்து துரத்தினார், அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பி வந்த நாய்கள், குறித்த நபரிடம் இருந்து பெண்ணை காப்பாற்றினர், அவரது கால்களை கடித்து இழுத்தன.

இக்காட்சிகளை பார்த்த போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் 16 வயதான சிறுவன் என தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த போலிசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.