குழந்தைகள் சிகிச்சை பிரிவில் படுத்து தூங்கிய தெருநாய்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
video
dog
ward
By Jon
கர்நாடகாவில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தெருநாய் படுத்து தூங்கிய வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள தலைமை மருத்துவமனையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் சிகிச்கைக்காக வந்தால், படுக்கை இல்லை என கூறி திருப்பி அனுப்பப்படும் வேளையில், நாய் படுத்து உறங்கும் காட்சிகளால் பொதுமக்கள் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.
மேலும் வீடியோவை பார்த்த பலரும், பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.