நீங்கள் ஸ்ட்ராபெர்ரி பிரியரா அப்போ எச்சரிக்கையா இருங்க : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில தினங்களுக்கு 17 நபர்களுக்கு ஹெபாடிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹெபாடிடிஸ் என்பது ககல்லீரல் செயலிழப்பையும் இதுவே அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை அருந்தினால் 15 முதல் 50 நாட்களுக்குள் நோய் பொதுவாக ஏற்படு,. சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோய் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நடந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த அடுத்தகட்ட ஆய்வில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
நீங்கள் எப்போது உங்கள் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கியுள்ளீர்கள், அல்லது அவற்றை உறைய வைப்பதற்கு முன்பு எங்கிருந்து வாங்கினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வீடு தேடி வரும் பேரதிஷ்டம் - எதிர்பாராத ராஜயோகத்தை பெற போகும் ராசிக்காரர்கள்!! இன்றைய ராசிபலன் IBC Tamil
