பெண்ணை தாக்கி கொன்ற செம்மறி ஆடு - விநோதமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
ஆப்பிரிக்காவின் தெற்கு சூடானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை செம்மறி ஆடு ஒன்று மோசமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
ஜாக்குலின் என்ற பெண்ணை ரம்பெக் கிழக்கு பகுதியில் அக்யுயேல் என்ற இடத்தில் அந்த செம்மறி ஆடு பலமுறை தாக்கியுள்ளது. இதனால் அந்த பெண்மணிக்கு நெஞ்சு எலும்பு முறிவு ஏற்படவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த செம்மறி ஆட்டை பிடித்து மாலேங் அகோக் பாயத்தில் உள்ள காவல் நிலையத்தில் கட்டிவைத்தனர்.
மேலும் இது குறித்து பேசிய மேஜர் எலைஜா மாபோர், “இந்த விவகாரத்தில் செம்மறி ஆட்டின் உரிமையாளர் நிரபராதி, செம்மறியாடுதான் இந்தக் குற்றத்தைச் செய்தது, எனவே அந்த ஆட்டை கைது செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
இந்நிலையில், பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனையாக, ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய நீதிமன்றம், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசுமாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.