உணவுக் கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பம் - ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு
By Nandhini
உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோட்டா மச்சிடா, யுயா சகாய் என்ற ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இவர்கள் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்ட்டை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.
