குலுங்கிய மதுரை; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் - ஏன் இறங்குறாரு தெரியுமா?
வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.
சித்திரை திருவிழா
மதுரை என்றால் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வீற்றிருக்கும் கோவில் மாநகரம் என்பது அவ்வளவு பரிட்சயம். அங்கு ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
அதன்படி இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக 21ம் தேதி கள்ளழகர் கோவிலில் இருந்து அழகர் புறப்பட்டார். கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர் சேவை நடந்தது.
புறப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்றார். முன்பாக ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார்.
எழுந்தருளிய கள்ளழகர்
இதையடுத்து விழாவின் மணிமகுட நிகழ்வாக தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ‛கோவிந்தா கோவிந்தா' என்று பக்தர்கள் கோஷம் விண்ணை பிளந்தது.
தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் என்ற செய்தியை கேள்விப்பட்டு அழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த திருமண வைபவத்தை காண அழகர்மலையில் இருந்து இறங்கி மதுரைக்கு வருகிறார்.
வரும் வழியில் எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இதனால் தங்கையின் திருமணத்தை காண முடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் என்பதுதான் புராண கதை.