டிரம்பை பார்த்து பயமெல்லாம் இல்லை; நிர்வாணமாக பார்த்தவள் நான் - நடிகை பரபர தகவல்

Donald Trump United States of America Crime
By Sumathi Apr 02, 2023 11:42 AM GMT
Report

டொனால்ட் டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு குறித்து ஸ்டோர்மி டேனியல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

ஆபாச பட நடிகை விவகாரம், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

டிரம்பை பார்த்து பயமெல்லாம் இல்லை; நிர்வாணமாக பார்த்தவள் நான் - நடிகை பரபர தகவல் | Stormy Daniels Im Not Afraid Donald Trump

இந்நிலையில், டிரம்ப் குறித்து பிரிட்டிஸ் செய்தி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை. அவரை நிர்வாணமாக பார்த்தவள் நான். எனவே அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது. ஏற்கனவே ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு, மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர்.

பரபர பேட்டி

அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது, மேலும் காயங்களும் மரணமும் ஏற்படப் போகிறத. இதிலிருந்து நிறைய நன்மைகள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஆனால் எப்படியிருந்தாலும், அதிலிருந்து நிறைய கெட்டதும் வரப்போகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் 2006 இல் கோல்ஃப் போட்டியின் போது ட்ரம்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.