அழகா சிாிச்சா புயல் மழைடா : 21ஆம் தேதி புயல் உருவாகிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu storm meteorologicalcenter
By Irumporai Mar 17, 2022 10:40 AM GMT
Report

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் மார்ச் 21-ஆம் தேதி புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும் என்றும்.

அழகா சிாிச்சா புயல் மழைடா  : 21ஆம் தேதி புயல் உருவாகிறது  வானிலை ஆய்வு மையம் தகவல் | Storm To Form On The 21St Meteorological Center

21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில் நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக  இன்றும்,நாளையும் வங்கக்கடலில் தென்கிழக்கு, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் எனவும் .

மார்ச் 19, மற்றும் 20-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதி, வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் குறைந்தபட்சம் மணிக்கு 45 கி. மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.